பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஸ........... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஸ...........

பசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராக இன்று (08) பதவியேற்கவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள பசில் ராஜபக்ஸவுக்கு ஆளும் கட்சியின் முன்வரிசையில் 9 ஆவது ஆசனம் வழங்கப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் கூறினார். பசில் ராஜபக்ஸவை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி நேற்று (07) வெளியிடப்பட்டது.

 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

About UPDATE